தருமபுரி : தருமபுரி மாவட்ட காவல்துறை மற்றும் தருமபுரி ஊராட்சி மன்றதலைவர்கள் பங்கேற்ற போதைப்பொருள் தடுப்பு தொடர்பான நல்லுறவு மற்றும் விழிப்புணர்வு கூட்டம் ஆட்டுக்காரம்பட்டியில் அமைந்துள்ள ஜோதி மகாலில் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சி. கலைச்செல்வன் இ.கா.ப, அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் போதை பொருளை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் பற்றியும் அதனை எவ்வாறு தடுப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.P. அண்ணாமலை (தலைமையகம்) மற்றும் ADSP திரு.P. இளங்கோ,CWC அவர்கள் மற்றும் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் மற்றும் 251 ஊராட்சி மன்ற தலைவர்கள் இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் பங்கேற்றனர்.