புதிதாக பதவியேற்றுள்ள தமிழக நிதி அமைச்சர் மாண்புமிகு திரு.தங்கம் தென்னரசு அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. நியூஸ் மீடியா அசோசியேசன் ஆப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவரும், போலீஸ் நியூஸ் பிளஸ் முதன்மை ஆசிரியருமான திரு.அ. சார்லஸ் அவர்கள் அறிவுறுத்தலின்படி, நியூஸ் மீடியா அசோசியேசன் ஆப் இந்தியா விருதுநகர் மாவட்ட தலைவரும், போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபரும், சமூக நல ஆர்வலருமான மா.முனியாண்டி அவர்கள், விருதுநகர் மாவட்டம் நல்லுக்குறிச்சி திருச்சுழி வட்டத்தில்,மல்லாங்கிணறில் மே 14 அன்று தமிழ்நாடு நிதி அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்களை சந்தித்து போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக அவரது பணி சிறக்க வாழ்த்து கூறப்பட்டது.
நியூஸ் மீடியா அசோசியேசன் ஆப் இந்தியா விருதுநகர் மாவட்ட தலைவரும், போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபரும், சமூக நல ஆர்வலருமான மா.முனியாண்டி அவர்கள், விருதுநகர் பகுதியில் பல்வேறு மக்கள் நலத்திட்ட பணிகளை செய்து வருகின்றார். மக்கள் குறைகளை அரசு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்கின்றார். நிதி அமைச்சர் நியூஸ் மீடியா அசோசியேசன் ஆப் இந்தியா சங்கத்தில் இணைந்துள்ள திரு.மா.முனியாண்டியின் பணி மேலும் சிறக்க அமைச்சர் அவர்கள் வாழ்த்து கூறினார்.
மேலும் நல்லுக்குறிச்சி, குறைவறை வாசித்தான், பாதனக்குறிச்சி, புளியண்டார் கோட்டை, ஒட்டங் குளம், வீரசோழன், ஆகிய ஆறு விவசாய கிராமங்களுக்கு வாழ்வாதாரமாக இயங்கி வரும் கிறதுமால் நதியில் இருந்து நீர்வரத்து, கால்வாய் மழை நீரால் சேதம் அடைந்ததை சுட்டிக்காட்டி, நீர்வரத்து கால்வாயின் இரு புறமும் காங்கிரட் தடுப்பு சுவர் அமைத்து தரும்படி அமைச்சரிடம் முறையாக மனு கொடுத்தார். அந்த மனுவை படித்துப் பார்த்த அமைச்சர் அவர்கள் நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்து உள்ளார்கள்.