சென்னை: பழைய மோட்டார் வாகனச் சட்டத்தில் சில திருத்தங்களை செய்து திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்தை கடந்த 2019ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த நிலையில், திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்தின்படி புதிய அபராத கட்டணங்கள் வசூலிப்பதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு அக்டோபர் 19 அன்று வெளியிட்டது. அதன்படி பல்வேறு தரப்பிலான விதிகள் அமலுக்கு வந்துள்ளன. விதிகளை மீறுவோரிடம் நிர்ணயிக்கப்பட்ட அபராதத் தொகை வசூலிக்கப்படும் என சென்னை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுபவர்களுக்கு முதன்முறை ஆயிரம் ரூபாய்;
இரண்டாவது முறை 10 ஆயிரம் ரூபாய் அபராதம்
ஹெல்மேட், சீட் பெல்ட் அணியாமல் செல்பவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம்
சிக்னலை மீறுபவர்களுக்கு முதன்முறை 500 ரூபாயும், 2-அது முறை 1,500 ரூபாயும் அபராதம்
புதிய சட்டத்தின் படி போதையில் வாகனம் ஓட்டுபவர் மட்டுமின்றி, பின்னால் அமர்ந்திருப்பவருக்கும் அபராதம்
சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்வோருக்கு முதல் முறை 500 ரூபாயும், இரண்டாம் முறை 1,500 ரூபாயும் அபராதம் வசூலிக்கப்படும்.
ஓட்டுனர் உரிமம் இல்லாமலும், 18 வயதிற்குட்பட்டோர் வாகனம் ஓட்ட அனுமதித்தாலோ ரூ.5,000 அபராதம் வசூலிக்கப்படும்.