திருவள்ளூர்: பொன்னேரி ஆர் டி ஓ அலுவலகம் அருகில் கிளை சிறை உள்ளது. இச்சிறையில் அம்பத்தூர் ஒரகடம் பகுதியைச் சேர்ந்த விசாரணை கைதி, டில்லிபாபு (25) கடந்த 7ஆம் தேதி கிளை சிறையில் அடைக்கப்பட்டார். டில்லி பாபு துப்புரவு பணியில் ஈடுபட்ட போது கேட்டை ஏறி, தப்பிச் சென்றுள்ளார். தகவல் அறிந்ததும் கிளைச் சிறை கண்காணிப்பாளர் திரு.சுயம்புலிங்கம் பொன்னேரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு கிளைசிறையில் தப்பி ஓடிய விசாரணைக் கைதியை தேடி வந்த நிலையில், பொன்னேரி அடுத்த கிருஸ்ணாவரம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, ஒரு மணி நேரத்தில் மடக்கி பிடித்து சிறையில் அடைத்தனர்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்