திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு பகுதியில் உள்ள இமானுவேல் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த மே மாதம் 1ஆம் தேதி மீஞ்சூர் பேரூராட்சி ஊழியர்கள்
கோவிந்தன், சுப்புராயலு, இருவர் பள்ளியின் கழிவறை தொட்டியை சுத்தம் செய்த போது விசவாயு தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி தாளாளர் நிர்வாகி சைமன்டி விக்டர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் மீஞ்சூர்பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மத்திய மற்றும் மாநில அரசின் தொழிலாளர் நல சட்டத்தின் விதிகளின் கீழ் இரண்டு தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்குள் பள்ளி நிர்வாகம் தலா 15 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்க கோரி வழங்கப்பட்ட நோட்டீசுக்கு உரிய இழப்பீடு வழங்காததால் தனியார் பள்ளிக்கு பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றி அரசு பொன்னேரி வட்டாட்சியர் செல்வகுமார் முன்னிலையில் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு