திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் நகரில், காந்தி சாலையில் தனியாக ஒரு குழந்தை அழுது கொண்டிருப்பதாக காவல் நிலையத்திற்கு வந்த தகவலையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். கி.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் அறிவுறுத்தலின்படி செய்யாறு உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. V.வெங்கடேசன் அவர்கள் மேற்பார்வையில் செய்யாறு காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் திரு.அமுல்தாஸ் (தனிப்பிரிவு) மற்றும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் திருமதி.ராணி அவர்கள் துரிதமாக செயல்பட்டு குழந்தையை மீட்டு விசாரணை நடத்தியதில் திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், பொக்க சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த, பிரவின் த/பெ வடமாலை என்பது தெரியவந்தது.
பின்னர் குழந்தை மீட்கப்பட்ட காந்தி சாலையில் அக்குழந்தையின் பாட்டி முனியம்மாள் என்பவர் அக்குழந்தையை தேடிவந்ததை அறிந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி மேற்படி குழந்தை முனியம்மாள் என்பவரின் பேரன் என்பது உறுதிப்படுத்தப்பட்டு குழந்தை அவரது பாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டது.