பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் வண்ணாரம்பூண்டி கிராமத்தை சேர்ந்த கொளஞ்சிநாதன் மகன் சரவணன் என்பவர் தன் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த TN 46 V 2877 என்ற இருசக்கர வாகனத்தை அடையாளம் தெரியாத நபர் திருடி சென்றுவிட்டதாக வ.களத்தூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வ.களத்தூர் காவல் நிலைய குற்ற எண் 113/22 U/s 379 IPC-ல் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளியை தேடி வந்த நிலையில் 04.12.2022-ம் தேதி வ.களத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. தேவராஜ், குற்றப்பிரிவு தனிப்படை உதவி ஆய்வாளர் திரு.மணிகண்டன் மற்றும் அவரது குழுவினருடன் வாகன சோதனையில் ஈடுபட்ட போது சந்தேகப்படும் வகையில் இரு சக்கர வாகனத்தில் வந்த அரவிந்த் (22) மேட்டுத்தெரு, பென்னகோணம், முத்துக்குமார் (21) பள்ளிவாசல் தெரு, திருமாந்துறை. ஆகிய இருவரையும் விசாரணை செய்ததில் மேற்படி வழக்கின் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் என்பதை உறுதி செய்து நிலையம் அழைத்து வந்து அவர்களிடமிருந்த மேற்படி வழக்கின் சொத்தான இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து குற்றவாளிகள் இருவரையும் நீதிமன்ற காவலுக்கு வ.களத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.தேவராஜ் அவர்கள் அனுப்பி வைத்தார். மேற்படி குற்ற வழக்கில் சிறப்பாக செயல்பட்ட குற்றப்பிரிவு தனிப்படையினர் மற்றும் வ.களத்தூர் காவல்நிலைய காவல்துறையினரை பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்கள் வெகுவாக பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.