திண்டுக்கல்: திண்டுக்கல் சிலுவத்தூர் அருகில் வங்கமனுத்து என்ற கிராமத்தில் பொன்னுவாடன் என்ற பெரியவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இரண்டு மகன்களும் கைவிட்டதால் அந்தப் பெரியவர் அனாதையாக்கப்பட்டார்.
அவருக்கு உணவு வழங்க யாரும் முன்வரவில்லை. இந்நிலையில் அருகில் இருப்பவர்கள் சிலர் உதவியால் அவர் உயிர் வாழ்கிறார். அந்த முதியவர் கிராமத்தில் உள்ள நாடக மேடையில் உணவு வழங்காமல், மருத்துவம் பார்க்கமல், நாடக மேடையிலே பல நாட்களாக போட்டு வைத்துள்ளனர்.
உடனடியாக அவர்கள் பிள்ளைகள் பெரியவரை கவனிக்கவில்லை என்றால் பிள்ளைகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் சாணார்பட்டி போலீசில் புகார் செய்தனர். சாணார்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களின் பிள்ளைகளை அழைத்து விசாரித்து வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா