கடலுார்:கடலுார் மாவட்டத்தில் முழு ஊரடங்கின் போது, தடையை மீறிச் சென்ற 168 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நேற்று முன்தினம் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டது. ஊரடங்கின் போது, தடையை மீறி சாலையில் திரிந்த 168 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.மேலும், 100 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. முகக் கவசம் அணியாமல் சென்ற 365 பேர் மீதும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் சென்ற 3 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது..