தேனி : தேனி மாவட்டம், பெரியகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடகரை சுப்பிரமணிய சாவடி தெரு பகுதியில், திரு.முத்துப்பாண்டி என்பவர்(20.09.22), நடந்து சென்று கொண்டிருந்தபோது கீழே கிடந்த பர்ஸ் ஒன்றை எடுத்து திறந்து பார்த்ததில் அதில் 10 பவுன் மதிக்கத்தக்க தங்க செயின் இருந்ததையடுத்து பெரியகுளம் காவல் ஆய்வாளர் திருமதி.M.மீனாட்சி, அவர்களிடம் உரியவரிடம் ஒப்படைக்குமாறு சொல்லிவிட்டு சென்று விட்டார். காவல்துறையின் விசாரணையில் அந்த தங்க செயின் பெரியகுளம் மூன்றாந்தாள் பகுதியைச் சேர்ந்த பாண்டிச்செல்வி என்பவரின் தங்க செயின் என்று தெரியவந்ததையடுத்து, பெரியகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திருமதி.T.கீதா, அவர்கள் முன்னிலையில் 10 பவுன் தங்கசெயினை திரு.முத்துப்பாண்டி அவர்கள் உரியவரிடம் ஒப்படைத்தார். தங்க நகை பெற்றுக் கொண்ட பெண் திரு.முத்துப்பாண்டி அவர்களுக்கும், தேனி மாவட்ட காவல்துறையினருக்கும் தனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.