திருநெல்வேலி: முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதையொட்டி நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் தலைமையில் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் ஊரடங்கின் போது தேவை இல்லாமல் வெளியில் சுற்றுபவர்களை கண்காணிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன்,பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு “டிரோன் கேமரா” வழங்கினார்.
துணை காவல் கண்காணிப்பாளர் அர்ச்சனா மற்றும் போலீசார் தாழையூத்து பகுதிகளில் டிரோன் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் அதிகமாக நடமாடக் கூடிய பஜார்,ஆற்றுப் பகுதிகள்,மற்றும் விளையாட்டு மைதானங்களிலிலும் பொதுமக்களின் நடமாட்டம் குறித்து டிரோன் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது.