திண்டுக்கல் : திண்டுக்கல் வேடசந்தூர் அருகே பூத்தாம்பட்டி டாஸ்மாக் கடை விற்பனையாளர் முருகேசன் என்பவரை கடந்த 2-ம் தேதி அருண்குமார் (32). என்பவர் பீர்பாட்டிலால் தாக்கியது குறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் அருண்குமாரின் குற்ற நடவடிக்கைகளை கொடுக்கும் பொருட்டு திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் பரிந்துரையின்படி கலெக்டர் பூங்கொடி, அருண்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டதையடுத்து வேடசந்தூர் போலீசார் அருண்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி