திருநெல்வேலி: கேரளாவில் கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வரும் நிலையில்,தமிழகம்- கேரள எல்லையான புளியரை சோதனைச் சாவடியில் பாதுகாப்பு பணியில் சுகாதாரத்துறை, காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் நேரில் சென்று அங்கு ஆய்வு நடத்தினார்.மேலும் கேரள எல்லை பகுதியான கோட்டைவாசலுக்கும், அதன் அருகில் இருக்கும் கேரள வனத்துறை சோதனை சாவடிக்கும் சென்று ஆய்வு நடத்தினார்.