மதுரை: சின்ன அனுப்பானடி சோனையா நகரை சேர்ந்தவர் இளங்கோ (43). இவர் வியாபாரி ஆவார். கீழமாரட்டு வீதி தயிர் மார்க்கெட் அருகே காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரிடம் இருந்த செல்போனை வாலிபர் ஒருவர் திருட முயன்றார். அவரை இளங்கோ கையும் களவுமாக பிடித்தார்.
பின்னர் அந்த வாலிபரை விளக்குத்தூண் போலீசில் ஒப்படைத்தார். அந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஹசன்சூர் என்ற ஊரைச் சேர்ந்த ராம்கி மகன் அமன் (20 ) என்று தெரியவந்தது. போலீசார் அந்த வாலிபரை கைது செய்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி