குமரி: கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பாலப்பள்ளத்தை சேர்ந்தவர் சுப்ரசாந். இவர் பைக்கில் பாரியந்தலிருந்து குறும்பனை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே அங்கு வந்த மர்ம நபர்கள் அவரது செல்போன் மற்றும் செயினை பறித்துவிட்டு தப்பி சென்றனர். அவர் இது குறித்து கருங்கல் போலீசில் புகார் அளித்தார்
. இன்ஸ்பெக்டர் திரு.ஜெய பிரின்ஸஸ் (பொறுப்பு) வழக்குபதிவு செய்து விசாரித்ததில் செல்போன் மற்றும் செயினை பறித்தது பள்ளம் பகுதியை சேர்ந்த அருள் அபிஷேக் 23. என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தார்.