திருப்பூர்: திருடுபோன செல்போன்கள் கண்டுபிடித்து பொதுமக்களுக்கு வழங்கி வரும் திருப்பூர் மாவட்ட காவல்துறை.
மாவட்டத்தில் கடந்த 2 மாதத்தில் காணாமல் மற்றும் திருடுபோன ஐந்து லட்சம் மதிப்புள்ள 40 மொபைல் மீட்கப்பட்டுள்ளதாகாவும், மொபைல்போன்கள் காணாமல் போனால் உடனடியாக சைபர் கிரைமில் புகார் அளிக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சசாங்சாய் வேண்டுகோள்.
திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காணாமல் மற்றும் திருட்டு போன செல்போனகளை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சசாங்சாய் முன்னிலையில் இன்று நடந்தது.
இதில் கடந்த 2 மாதத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காணாமல் போன சுமார் 5 லட்சம் மதிப்புள்ள 40 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கபட்டுள்ளது.
திருட்டுப்போன செல்போன்களை மீட்பதற்காக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் தங்களின் செல்போன்கள் திருடு போனால் கவலைப்படாமல் உடனடியாக சைபர் கிரைமில் புகார் அளிக்க வேண்டும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.