திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு S. அரவிந்த் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், வந்தவாசி உட்கோட்ட துணை காவல் காவல் கண்காணிப்பாளர் திரு P. தங்கராமன் அவர்களின் தலைமையில், தெள்ளார் காவல் நிலையத்தின் சார்பாக கொரோனா 2-ம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், அப்பகுதி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், “செய்வன திருந்தச் செய்” எனும் திட்டத்தின் கீழ் முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும் மற்றும் சமூக இடைவெளி பின்பற்றுவதன் அவசியம் குறித்தும், அவ்வப்போது கைகளை சோப்பு போட்டு நன்கு கழுவுவதன் அவசியம் குறித்தும், தெள்ளார் காவல் ஆய்வாளர் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் தொடர்ந்து அப்பகுதி பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இச்செயல் அப்பகுதி பொதுமக்களிடையே நன்கு வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்
திரு.தாமோதரன்