சென்னை : இணையவழி குற்றங்கள் தொடர்பான புகார் அளிக்க, சைபர் க்ரைம் தனிப்பிரிவை சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தொடங்கி வைத்தார். சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க காவல் நிலையங்களில் சைபர் பிரிவுகளை அமைக்க முதலமைச்சர், உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து சென்னையில் உள்ள 12 காவல் மாவட்ட துணை ஆணையர் அலுவலகத்தில் சைபர் க்ரைம் தனிப்பிரிவை சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தொடங்கி வைத்தார். இன்று முதல் சைபர் குற்றப்பிரிவு, செயல்படத் தொடங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர் அப்துல் ஹாபிஸ் வண்ணாரப்பேட்டை
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர் அப்துல் ஹாபிஸ் வண்ணாரப்பேட்டை