ஈரோடு : ஈரோடு மாவட்டம், சென்னிமலை to காங்கயம் மெயின்ரோடு வெப்பிலி பிரிவில் அதிகளவில் விபத்துகள் நடந்து உயியிழப்பு ஏற்படுகிறது. இதனால் பொது மக்கள் அந்த வெப்பிலி பிரிவில் பேரிகாடு மற்றும் ஸ்பிடு பிரேக் வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வந்தனர்.
அடிக்கடி நடக்கும் இந்த விபத்து பகுதியை பெருந்துறை போக்குவரத்து காவல் ஆய்வாளர் பிரேம் குமார் மற்றும் சென்னிமலை காவல் உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் நேற்று (9 – 11 – 2023) மாலை 7 மணியளவில் அந்த இடத்தை ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது பொதுமக்கள் மற்றும் எக்கட்டாம்பாளையம் பஞ்சயாத்து தலைவர் உடனிருந்தனர்.
ஈரோட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்கள் :
R.கிருஷ்ணமூர்த்தி
N.செந்தில்குமார்