கோவை: கோவை சிங்காநல்லூர் பக்கம் உள்ள இருகூர் சண்முகா நகரில் வசிப்பவர் சண்முகம் 71. இவரது வீட்டில் பணம் வைத்து சீட்டாடுவதாக சிங்காநல்லூர் காவல் நிலையத்திற்கு நேற்றிரவு தகவல் வந்தது.
இன்ஸ்பெக்டர் திரு,அருண் ,சப் இன்ஸ்பெக்டர் திரு.பாஸ்கரன் ஆகியோர் சென்று அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிய தாக 9 பேர் கைது செய்யப்பட்டனர்.சூதாட பயன்படுத்தப்பட்ட ரூ 4 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்