கோவை: கொரோனா ஊரடங்கால் சிலர் வீட்டிலே இருப்பதால் பொழுதுபோக்குக்காக வீடுகளில் சிலர் பணம் வைத்து சீட்டாடுவதாக மாநகர காவல்துறைக்கு தகவல் வந்தது ,போலீஸ் கமிஷனர் தீபக் எம்.தமோர் உத்தரவின்பேரில் காட்டூர் போலீசார் காந்திபுரம் வி.கே கே மேனன் ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் நேற்று மாலை சோதனை செய்தனர்.
அப்போது அங்கு பணம் வைத்து சீட்டாடியதாக டவுன் ஹால் சங்கிலி துரை 28 செல்வபுரம் ராதாகிருஷ்ணன் 49 காந்திபுரம் சுப்பிரமணி 60 தெலுங்குபாளையம் கணேசன் 54 பைவ் கார்னர் தினேஷ் 20 வி.கே. கே மேனன் ரோடு ஜம்புலிங்கம் 48 ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சீட்டாட பயன்படுத்தப்பட்ட 11ஆயிரத்து 510 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.