திண்டுக்கல்: பொழுதுபோக்க வழியின்றி ஊருக்கு வெளிப்புறத்தில் உள்ள தோட்டங்களில், நண்பர்கள் ஒன்றுகூடி சூதாட்டங்களை நடத்தி வருகின்றனர். புறநகர் போலீசாருக்கு இந்த விஷயம் தெரிந்த போதும் நடவடிக்கை எடுக்க முடியாமல் கைகளைப் பிசைந்து நிற்கின்றனர்.
சில போலீசார் சோதனை நடத்தும் முன்பே சூதாட்டக் காரர்களுக்கு தகவல் தெரிவிக்கின்றனர். சூதாட்டம் நடத்துபவர்கள் தப்பித்து ஓடி விடுகின்றனர். திண்டுக்கல் தாலுகா போலீசார் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
திண்டுக்கல் பழனி பைபாஸ் அருகே பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதியில் தாலுகா காவல் ஆய்வாளர் பார்த்திபன் ,சார்பு ஆய்வாளர் விஜய் மற்றும் காவலர்கள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சூதாட்டம் நடத்திய 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா