திண்டுக்கல்: திண்டுக்கல்தாடிக்கொம்பு அருகே இன்னாசிபுரம் பூஞ்சோலை அருகே தோட்டத்தில் பணம் வைத்து சூதாடிய பாலசுப்பிரமணி, கார்த்திக், முருகன், காளிமுத்து உட்பட 9 பேரை தாடிக்கொம்பு போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 8 பைக்குகள், ரூ.8,200 பறிமுதல் செய்து விசாரணை செய்கிறார்கள். திண்டுக்கல் மாவட்டத்தில் பல இடங்களில் சூதாட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. போலீசார் ரோந்து செல்வதும்,
பலர் பிடிபடுவதும் தொடர் நடவடிக்கையாக உள்ளது. போலீசார் கொரோனா பணியில் அதிக கவனம் செலுத்துவதால் குற்றவாளிகள் தப்பித்து வருகின்றனர்.
இதனால் தனிப்படை அமைத்து சூதாட்டம் நடப்பவர்களை கண்டுபிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.



















