திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள வாலி செட்டியப்பட்டி கிராமத்தில் ஒரு கும்பல் சூதாட்டம் நடத்துவதாக வேடசந்தூர் தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த இடத்தை சுற்றி வளைத்தனர்.
இதில் திண்டுக்கல் வடமதுரை அருகே உள்ள வாலிசெட்டிபட்டி சேர்ந்த வெள்ளைச்சாமி தங்கராஜ் பாபு மற்றும் பாபு முருகேசன் மற்றும் முருகேசன் மாரியம்மன் வடிவேல் முனியாண்டி உள்பட 10 பேரை கைது செய்தனர்.
இதில் இருவர் தப்பி ஓடினர். அவர்களிடமிருந்து இரண்டு டூவீலர், கார், ரூபாய் 9630/= பறிமுதல் செய்தனர். வேடசந்தூர் துணை கண்காணிப்பாளரின் தனிப்படை போலீசார் அதிரடி சோதனை மூலம் பிடிபட்டவர்கள் மீது சப்-இன்ஸ்பெக்டர் திரு.ராஜகோபால் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா