தேனி : தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் / படைத்தலைவர் முனைவர்.செ. சைலேந்திரபாபு,இ.கா.ப., அவர்கள் தலைமையில் திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தேனி மாவட்டத்தில் கடத்தல், கஞ்சா, திருட்டு மற்றும் சைபர்கிரைம் குற்ற வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டு விரைந்து குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்திய தேனி மாவட்ட காவல்துறையினரின் சீர்மிகு பணியை பாராட்டி திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் நற்சான்றிதழ், பண வெகுமதி வழங்கி, மேலும் சிறப்பாக பணி தொடர தனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து திருட்டு வழக்கில் மீக்கப்பட்ட பொருட்களை உரியவரிடம் வழங்கினார். இந்நிகழ்வில் தென் மண்டல காவல்துறை தலைவர் திரு.அஸ்ராகார்க்,இ.கா.ப., அவர்கள், திண்டுக்கல் சரக காவல்துறை துணைத்தலைவர் முனைவர்.அபிநவ்குமார்,இ.கா.ப., அவர்கள், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப., அவர்கள்,திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்கள் உடன் இருந்தனர்.