ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி காவல் சார்பு ஆய்வாளர் விக்னேஸ்வரன் தலைமையில் போலீசார் நேற்று மாலை 5 மணியளவில் ரோந்து சென்றனர். அங்குள்ள காம்ப்ளக்ஸில் சீட்டாடுவதாக தகவல் கிடைத்தது . இதன்படி அங்கு சென்ற போலீசார் சீட்டாடிக்கொண்டிருந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர்.
விசாரணையில், சாயல்குடி அரண்மனை தெரு பொன்னுச்சாமி மகன் கதிர்வேல் நாதன் 36, சுப்ரமணியன் மகன் ஹரி முருகன் 24, வேலு மகன்கள் முருகன் 24, தர்மதுரை 29, மலைராஜ் மகன் நாகராஜ் 37,வடக்கு தெரு ராஜகுரு மகன் அரிமுருகன் 30, பிள்ளையார்குளம் திக்விஜயன் மகன் வீரமணி 30, எஸ்வி நகர் முருகேசன் மகன் மலைராஜன் 33, நாடார் தெரு சவுக்கத்தலி மகன் இம்ரான் கான் 25 ஆகியோர் பணம் வைத்து சீட்டாடியது தெரிந்தது. இவர்களிடமிருந்து சூதாட்ட பணம் 15,610 ஐ சார்பு ஆய்வாளர் விக்னேஸ்வரன் பறிமுதல் செய்து 9 பேரையும் கைது செய்தார்.