சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி உட்கோட்டம், சாக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குள் கடந்த வாரம் அதிகாலையில் பணியில் இருந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் மற்றும் காவலரும் தாங்கள் எதிராக வந்து காரை நிறுத்தி காரில் வந்தவர்களை விசாரணை செய்த பொழுது வண்டியில் வந்த நான்கு பேரும் ஓடி ஒளிந்து விட்டனர். பின்னர் வண்டியை சோதனை செய்ய சுமார் 34 கிலோ கஞ்சா வண்டியில் இருந்ததை அறிந்து அப்படியே வண்டியை நிலையம் கொண்டுவந்து கு. எ. 380/2019 ச. பி. 8(c) r/w 20(b)(2)(c), 25 NDPS ஆக வழக்குப் பதிவு செய்து , தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரோகித்நாதன் ராஜகோபால் IPS அவர்கள் உத்தரவின் பேரில், காரைக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு Dr. அருண் அவர்கள் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு, குற்றவாளியை தேடிய நிலையில் குற்றவாளிகள் கரூர் , தேனி , நீலகிரி புதுக்கோட்டை போன்ற ஊர்களில் இருந்தனர். இவர்களை பிடிக்க உதவிய சிவகங்கை மாவட்ட cyber crime Si சுரேந்திரன் , சென்னை தரமணி ராஜசேகர் அவர்கள், பாண்டிச்சேரி திரு. ராஜூ,திரு. மணி அவர்கள் மற்றும் கரூர் Crime Team, புதுக்கோட்டை திரு. கணேசன் மற்றும் திரு. நாகராஜன் அவர்கள் , ஊட்டி தாஜூ மற்றும் கோத்தகிரி SI திரு. வேல்முருகன் அவர்கள் ஆகிய அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி