சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியைச் சேர்ந்த ரவி என்பவர் 19 வயது இளம்பெண்ணிடம் திருமண ஆசை வார்த்தை கூறி பலமுறை பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.
இது குறித்து அப்பெண்மணி 06.08.2020 அன்று அளித்த புகாரின் பேரில் சிவகங்கை அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் ரவி மீது u/s.5(j)(ii)(l) & 6 of POCSO Act – ன் கீழ் வழக்குப் பதிந்து 08.08.2020 அன்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே திராணி பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவரை முன்விரோதம் காரணமாக சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். இக்கொலை சம்பவம் குறித்து திருவேகம்பத்தூர் போலீசார் 06.08.2020 அன்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வந்த நிலையில் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மணிவேல் என்பவரை 06.08.2020 அன்று திருவேகம்பத்தூர் போலீசார் u/s 449, 294(b),352,302 IPC & 4 of TNPWH Act-ன் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சாக்கோட்டை பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் 17 வயது சிறுமியிடம் திருமண ஆசை வார்த்தை கூறி பலமுறை பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இது குறித்து சிறுமியின் தாயார் 04.08.2020 அன்று அளித்த புகாரின் பேரில் காரைக்குடி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் கார்த்திக் மீது u/s.5(j)(ii)(l) & 6 of POCSO Act – ன் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.கணேஷ் பாபு
சிவகங்கை