திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் சிலம்பம் திரைப்பட குழுவினர் நடத்திய மாநில அளவிலான சிலம்ப சாம்பியன்ஷிப் போட்டி பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசினர் கலைக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. தமிழகத்தில் சிலம்ப கலையை மாணவர்கள் மத்தியில் ஊக்குவிக்கும் விதத்தில் சிலம்பம் திரைப்பட குழுவினர் சிலம்பப் போட்டியினை நடத்தினர். திரைப்பட ஸ்டண்ட் இயக்குனர் பவர் பாண்டியன் ஆசான் தலைமையில் பில்டர்ஸ் அசோசியேசன் ஜி.வி.என் குமார்
முன்னிலையில் நடைபெற்ற துவக்க விழாவில் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் புலிக்குளம் டாக்டர் ஏ.கே.எஸ்.ஜோதி வரவேற்பு வழங்கினார்.
முன்னாள் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினரும் அஇஅதிமுக மாநில அம்மா பேரவை இணை செயலாளருமான பொன். ராஜா குத்துவிளக்கேற்றி போட்டியினை துவக்கி வைத்தார். சிலம்பம் உறுதிமொழி ஏற்றபின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாஜக துணை தலைவர் நந்தன், அஇஅதிமுக மீஞ்சூர் மேற்கு ஒன்றிய செயலாளர் வினோத் குமார்,முன்னாள் தடப்பெரும்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் ஆகியோர் துவக்க விழாவில் கலந்து கொண்டனர். பிற்பகல் நடைபெற்ற சிலம்பாட்ட போட்டிகளை பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.எம்.ஆர் ஜானகிராமன்,ரயில்வே கமிட்டி தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட தலைவர் சுந்தரம் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
அவர்களுடன் மாவட்ட பொதுச்செயலாளர் கே.ஜி. எம் சுப்பிரமணி, டி.பிரேமா குமாரி துணைத் தலைவர் பி மாலதி ஒன்றிய தலைவர்கள் பிரபு,வருண் காந்தி, அரவிந்த் மற்றும் பாஜக நிர்வாகிகள் கோவிந்தராஜ்,செல்வ முருகன், சிவராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் நடைபெற்ற சிலம்பு போட்டியில் தொடுதல் போட்டி,தனி சுற்று ஆகிய போட்டிகள் இரு பாலருக்கும் தனித்தனியே நான்கு பிரிவுகளில் நடைபெற்றது. இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 250க்கும் மேற்பட்ட மாணவி மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமையினை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார். அவருடன் காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவர் சதாசிவலிங்கம் திமுக பொன்னேரி நகர் மன்ற தலைவர் வழக்கறிஞர் ரவிக்குமார்,முன்னாள் மீஞ்சூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி.ரவி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு
















