ஈரோடு : கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி கடந்த 3ஆம் தேதி உடல்நலக்குறைவின் காரணமாக கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.அங்கு மாணவிக்கு பரிசோதனை நடத்தப்பட்டதில் அவர் 6 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பிரியாதேவி மற்றும் அதிகாரிகள் அந்த மாணவியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவியின் மாமா முறையான கார்த்திக் என்பவரும் சகோதரர் முறையான 17 வயது சிறுவர்கள் 2 பேரும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியது தெரிய வந்தது.
இதுகுறித்து கோபி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து,கார்த்திக்கை ஈரோடு கிளைச்சிறையிலும், 2 சிறுவர்களை கோவையில் உள்ள கூர்நோக்கு இல்லத்திலும் அடைத்த
ஈரோட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்கள் :
R.கிருஷ்ணமூர்த்தி
ஈரோடு மாவட்ட தலைவர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா