பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் உத்தரவின்படி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.இரா.பாண்டியன், அவர்களின் தலைமையில் பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தியுள்ளனரா என்று மாவட்டத்தில் உள்ள கடைகள், தொழிற்சாலைகள் மற்றும் கோழிப்பண்ணைகள் என பல்வேறு இடங்களில் சிறப்பு ரோந்து அலுவல் மேற்கொள்ளப்பட்டது.
இந்த சிறப்பு ரோந்து அலுவல் பணியில் தொழிலாளர் நல உதவி ஆணையர் திரு.மூர்த்தி, தொழிலாளர் நல ஆய்வாளர் திரு.சாந்தி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.விஜயலெட்சுமி, சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.மருதமுத்து மாவட்ட குழந்தை நல அலுவலர் திரு.கோபிநாத், சைல்ட் லைன் திருமதி.திவ்யா, சமூக நலத்துறை உறுப்பினர் திருமதி.ரேகா ஆகியோர்கள் இணைந்து ரஞ்சன்குடி, தேவையூர், சின்னாறு ஆகிய கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.