கோவை : கோவை மத்திய மண்டலத்திற்குட்பட்ட 9 மாவட்டங்களில் திருச்சி, புதுக்கோட்டை கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை கடந்த (1/3/2023) ஆம் தேதி முதல் (7/3/2023) ஆம் தேதி வரை குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு வழக்குகளுக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் நீண்ட நாட்களாக தலைமறைவாக உள்ள குற்றவாளிகளின் மீதுள்ள நீதிமன்ற பிடி கட்டளைகளை நிறைவேற்றுதல் சம்பந்தமாக சிறப்பு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. மேற்கண்ட சிறப்பு தேடுதல் வேட்டையில் மதிய மண்டலம் முழுவதுமாக 1313 நீதிமன்ற பிடி கட்டளைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது அவற்றில் திருச்சி மாவட்டத்தில் 77 பிடி கட்டளைகளும் புதுக்கோட்டையில் 122 பிடி கட்டளைகளும் கரூர் மாவட்டத்தில் 48 ம் பெரம்பலூரில் 50-ம் அரியலூர் மாவட்டத்தில் 266 பிடி கட்டளைகளும் திருவாரூர் மாவட்டத்தில் 33 பிடி கட்டளைகளும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 38 நாகப்பட்டினத்தில் 37, மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் 102 நிறைவேற்றப்பட்டுள்ளன. செக் மோசடி வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளின் மீதுள்ள 102 நீதிமன்ற பிடி கட்டளைகளும் விடுவிக்கப்பட கூடிய வழக்குகளில் சம்பந்தப்பட்ட 10 நீதிமன்ற பிடி கட்டளைகளும் இச்சிறப்பு தேடுதல் வேட்டையின்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஏழு நாட்களில் மத்திய மண்டலத்தில் உள்ள மாவட்டங்களில் கொலைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய 28 குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் கடந்த பிப்ரவரி மாதத்தில் மத்திய மண்டலத்தில் ரவுடிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கையில் 114 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 149 ரவுடிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர், ரவுடிகளின் நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் கட்டப்பஞ்சாயத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களின் மீது தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மதிய மண்டல காவல்துறை தலைவர் திரு.கார்த்திகேயன் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்