ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சத்தியமங்கலம் பண்ணாரியை அடுத்த புதுப்பீர்கடவு அருகே தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படை முகாமை தமிழக போலீஸ் டி.ஜி.பி. திரு.செ.சைலேந்திரபாபு நேற்று ஆய்வு செய்தார். அப்போது கிராம மக்களுக்கு தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படை மூலமாக செய்யப்படும் நலத்திட்டங்கள் மற்றும் வன குற்றங்களை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் தமிழ்நாடு, கர்நாடகா கேரளா ஆகிய 3 மாநிலங்களை சேர்ந்து சோதனை சாவடி அமைப்பது குறித்தும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.