தேனி : தேனி மாவட்டம், ஆண்டிபட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020 -ஆம் ஆண்டு சிறுமிக்கு ஆசைவார்த்தை கூறி திருமணம் செய்து பாலியல் தொல்லை செய்த மகாலிங்கம் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டு, வழக்கானது விசாரணையில் இருந்து வந்த நிலையில் இவ்வழக்கு (02.03.2023)-ம் தேதியன்று தேனி மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் இறுதி விசாரணையின் முடிவில் தேனி மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி திருமதி.திலகம்,B.A,B.L., அவர்கள் ஆண்டிபட்டி காவல் நிலைய காவல்துறையினரால் அளிக்கப்பட்ட தக்க சாட்சியங்களின் அடிப்படையில் மகாலிங்கம் என்பவர் குற்றவாளி என சந்தேகத்திற்கு இடமில்லாமல் உறுதி செய்து சட்டப்பிரிவு 6 of POCSO Act-ன் படி 20 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனையும், அபராத தொகையாக 15,000/- ரூபாய் விதித்தும் கட்ட தவறினால் 5 ஆண்டுகள் மெய்க்காவால் சிறை தண்டனையும், 366 IPC-ன் படி 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், அபராத தொகையாக 5000/- ரூபாயும் கட்ட தவறினால் ஒரு வருடம் மெய்க்காவல் சிறை தண்டனையும், அனுபவிக்க வேண்டுமெனவும் தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் திறம்பட வாதுரைத்த அரசு தரப்பு வழக்கறிஞர் திரு.குருவராஜ்,B.A,B.L., அவர்களையும், சிறப்பாக புலன் விசாரணை செய்த ஆண்டிபட்டி காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி.உஷா அவர்களையும், வழக்கின் சாட்சிகளை உரிய நேரத்தில் ஆஜர்படுத்திய தற்போதைய ஆண்டிபட்டி காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.சிவகுமார் அவர்களையும், மேலும் இந்த வழக்கில் சாட்சியங்கள் ஆஜர்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்ட நீதிமன்ற பெண் காவலர் (1934)- திருமதி.மணிமாலா அவர்களையும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப., அவர்கள் தனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார்.