திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், காங்கயம் பரஞ்சேர்வழி தீத்தம்பாளையத்தை சேர்ந்தவர் பழனி (62), இவர் கடந்த (26-8-2020), அன்று (13) வயது சிறுமியை ஏமாற்றி வீட்டுக்கு அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாயார் காங்கயம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து பழனியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது குறித்த வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.
போக்சோ பிரிவு குற்றத்துக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை, ரூ.1,000 அபராதம், கொலை மிரட்டல் விடுத்த குற்றத்துக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை, ரூ.1,000 அபராதம், வன்புணர்வு செய்த குற்றத்துக்கு 20 ஆண்டு சிறை தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம் என மொத்தம் 47 ஆண்டு சிறை தண்டனை, ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி நாகராஜன் தீர்ப்பளித்தார். பாராட்டு இந்த வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து, சாட்சிகளை உரிய நேரத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக்கொடுத்த காங்கயம் மகளிர் போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு.சசாங் சாய், பாராட்டினார்.

















