ராமநாதபுரம்: ராமநாதபுரம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக்,IPS., அவர்கள் உத்தரவின் போில் காவல் நிலையங்களில் பதிவான, தொலைந்து போன மொபைல் போன் தொடர்பான வழக்குகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.
இதன் அடிப்படையில் இராமநாதபுரம் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.அருண் அவர்கள் தலைமையில் கடந்த மூன்று மாதங்களில் சைபர் கிரைம் காவல் துறை மூலம் 110 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
சைபர் கிரைம் காவல்துறையினர் மற்றும் தனிப்படை காவல் ஆளினர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக், IPS.,அவர்கள் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக பண வெகுமதி அளித்து பாராட்டினார்.