அரியலூர் : அரியலூர் மாவட்டத்தில் கஞ்சா, கொலை மற்றும் சைபர் குற்ற வழக்குகளில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு, நற்சான்றிதழ் மற்றும் பண வெகுமதியினை, திருச்சி சரக டி.ஐ.ஜி திரு A. சரவண சுந்தர் I.P.S அவர்கள் பாராட்டி வழங்கினார்கள். அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. K.பெரோஸ்கான் அப்துல்லா, அவர்கள் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (சைபர் குற்றப்பிரிவு)திரு. ரவி சேகரன், அவர்கள் உடன் இருந்தார்கள்.