மதுரை : மதுரை சுப்ரமணியபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அன்புதாசன், பழங்காநத்தம் வ.உ.சி. பாலத்தில் வாகன சோதனை செய்து கொண்டிருந்த போது,
நான்கு சக்கர வாகனத்தில் வந்தவர்களை நிறுத்த முயற்சித்த போது, தப்பியோட முயன்றவர்களை பிடித்து விசாரித்த போது, ஹார்விபட்டியை சேர்ந்த காசி விஸ்வநாதன் என்பதும், இலங்கையை சேர்ந்த சிவராஜ் என்பதும் தெரிய வந்தது. மேலும், அவர்கள் பெங்களூருவில் இருந்து சுமார் 16.5 கிலோ மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்களை கடத்தி வந்தது தெரியவந்தது.
மேலும், விசாரணையில் சிவராஜ் இலங்கை முல்லைத்தீவை சேர்ந்தவர் என்பதும் கள்ளதோனியில் ராமேஸ்வரம் வந்து ராஜேஷ் என்ற பெயரில் திருப்பத்தூரை சேர்ந்த ஏஜென்ட் செல்வம் மூலம் சென்னையில் போலியான முகவரியில் டிரைவிங் லைசன்ஸ் பெற்று போலியான பாஸ்போர்ட் தயாரித்து துபாய் சென்று பின் அதன் மூலம் இலங்கை சென்றதாகவும், அங்கிருந்து இந்தியா வந்தபோது மேற்படி பாஸ்போர்டை தொலைத்து விடவே, மீண்டும் போலியான பாஸ்போர்ட் தயாரிக்கும் நோக்கத்தில் துபாயில் நண்பர் மூலம் பழக்கமான காசி என்பவருடன் சேர்ந்து மதுரையில் வேறு ஒருவரின் முகவரியில் ஆதார் கார்டு பெற்று அதனைக் கொண்டு, டிரைவிங் லைசன்ஸ் தயாரித்து மேலும் செலவிற்காக பெங்களூருவில் இருந்து தடைசெய்யப்பட்ட குட்காவை வாங்கி மதுரையில் விற்பனை செய்ய கடத்தி வந்தது தெரியவந்தது. காசி மற்றும் இலங்கையை சேர்ந்த சிவராஜ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்க பட்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி