சென்னை : சென்னை ஜே. ஜே நகரில் மது போதையில், பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்ட மணிகண்டன் என்ற ரவுடியை பிடிக்க முயன்ற போது மது பாட்டிலை உடைத்து ஜே. ஜே நகர் காவல் நிலைய தலைமை காவலர்கள் திரு.நந்தகோபால், மற்றும் திரு.ராயப்பன், ஆகியோரை தாக்கினான். இதில் பலத்த காயம் அடைந்த தலைமை காவலர் திரு.நந்தகோபால், அண்ணா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காயம் அடைந்த தலைமை காவலரை இன்று காலை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் / படைத்தலைவர் முனைவர் திரு.செ.சைலேந்திரபாபு, IPS., அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவருக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவியையும் செய்து தர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்திகளுக்காக
சென்னையிலிருந்து
திரு.முகமது மூசா