சிவகங்கை : சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ரோஹித் நாதன் ராஜகோபால் இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி காரைக்குடி உட்கோட்டம், சோமநாதபுர காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. அமுது அவர்கள் சோமநாதபுரம் நகர் பகுதியில் பொது மக்களிடையே ஹெல்மெட் அணிவதன் பயன்கள் குறித்தும்,உங்களின் வருகையை எதிர்பார்த்து உங்கள் குடும்பத்தார் அல்லது பிள்ளைகள் இருப்பார்கள் என்றும், தற்செயலாக வரும் ஆபத்திலிருந்து நம்மைக் காப்பதற்கு ஹெல்மட் அவசியம் என்பதையும் அதிவேகப் பயணம் கண்டிப்பாக ஆபத்தை உண்டாக்கும் எனவும் சாலை விதிகளை மதித்து நடப்பது நம்முடைய கடமை என்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.கணேஷ் பாபு
சிவகங்கை