திருவள்ளூர்: திருவள்ளூரை அடுத்த ஈக்காடு பெத்தேல்புரத்தை சேர்ந்தவர் ராகவனின் மகன் நித்தியானந்தம் வயது 60, ஈக்காடு பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் காவலராக வேலை பார்த்து ஓய்வு பெற்று தற்போது வீட்டில் இருந்துள்ளார்.
இந்தநிலையில் மாலை ஐந்து முப்பது மணி அளவில் தனது இருசக்கர வாகனத்தில் வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு செல்ல திருவள்ளூர் செங்குன்றம் நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.
அப்போது மெய்யூரில் இருந்து திருவள்ளூர் வரை இயக்கப்படும் அரசு போக்குவரத்து கழக பேருந்து இவர் மீது மோதியது, இதில் பலத்த காயம் அடைந்த நித்தியானந்தம் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து புல்லரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீஸ் நிலையம் வந்து சரணடைந்த ஓட்டுனர் மற்றும் நடத்துனரிடம் விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளுரிலிருந்து குடியுரிமை நிருபர்
V.கோபி