மதுரை : மதுரை மாநகர் காமராஜர் சாலையில் நேற்று 06.07.2020-ம் தேதி நடந்து சென்றபோது அதிகமான வெயிலின் தாக்கத்தால் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் வலிப்பு ஏற்பட்டு கேட்பாரற்று கிடந்த முதியவரை கண்ட அப்பகுதி பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக விளக்குத்தூண் காவல் ஆய்வாளர் திருமதி. லோகேஸ்வரி அவர்கள் காவலர்களுடன் சென்று ஆம்புலன்ஸ் மூலமாக முதியவரை அழைத்து சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர்.
காவல் ஆணையர் திரு.பிரேம்ஆனந்த் சின்ஹா IPS., அவர்கள், ஊரடங்குக் காலத்தில் நோய்த்தொற்று பரவாமல் தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வெளியே வரவேண்டுமென்றும், முதியவர்களை வெளி இடங்களுக்கு அனுப்பாதீர்கள் என்று பல முறை கேட்டுக்கொண்டாலும் யாரும் அவற்றை பின்பற்ற மறுப்பது ஏன்? காவல்துறை உங்கள் நண்பன் என்பதை ஒருபோதும் மறவாமல் நோய்த்தொற்று பரவாமல் தடுக்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் முழு ஒத்துழைப்பு தரும்படி மதுரை மாநகர் காவல் அன்புடன் கேட்டுக் கொள்கின்றது.