திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காட்டில் பூமி கோட்டை கிராமம் உள்ளது.இந்த கிராமத்தில் வசிப்பவர் ஷாஜகான் இவருக்கு இரண்டு மனைவிகளும் திருமணமான ஒரு மகளும் உள்ளனர்.
பழவேற்காடு பேருந்து நிலையம் அருகே பிரதான சாலையில் சைக்கிள் பஞ்சர் கடை நடத்தி வரும் இவர் கள்ளத்தனமாக சாராயம் காய்ச்சுவதாக காவல்துறைக்கு வந்த தகவலின் அடிப்படையில் அவரது வீட்டில் சென்று பார்த்தபோது.
சாராயம் காய்ச்சும் பானைகள்,ஊரல்கள் போட்ட பொருட்கள்,பேரல்கள் உள்ளிட்டவை இருந்தது தெரியவந்தது.இதனால் ஷாஜகானை கைது செய்து 2 லிட்டர் எரி சாராயம் 15 லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 பானைகள்,30 லிட்டர் கொள்ளளவு கொண்ட 1 இரும்பு பேர்ல் உள்ளிட்ட சாராயம் காய்ச்சிய பொருட்களையும் போலீசார் கைப்பற்றி திருப்பாலைவனம் காவல் நிலையம் கொண்டு சென்றனர்.
தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான மக்கள் நடமாடும் பிரதான சாலை அருகே இப்படி சாராயம் காய்ச்சும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்