கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கார்மங்குடி கிராமத்தில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக இன்ஸ்பெக்டர் விஜயரெங்கனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவல் அடிப்படையில் கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் கருவேப்பிலங்குறிச்சி அடுத்த கார்மாங்குடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர் .
அப்போது அறிவழகன் என்பவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் 50 லிட்டர் விஷ சாராயம் ஊரல் வைத்திருப்பது தெரியவந்தது இதையடுத்து விருத்தாசலம் அடுத்த கார்குடல் மேட்டு தெருவைச் சேர்ந்த சிவலிங்கம் மகன் அறிவழகன் என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த 50 லிட்டர் விஷ சாராயத்தை பறிமுதல்செய்தனர்.