கனடா நாட்டின் வின்னிபெக்கு நகரில் நடைபெற்ற, காவல் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கான சர்வதேச விளையாட்டுப் போட்டிகள்-2023
போட்டியில், அகில இந்திய காவல் துறை விளையாட்டு கட்டுப்பாட்டு வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட இந்திய அணி சார்பில் கலந்து கொண்ட திரு. எஸ். சிவா, திரு. ஆர். தினேஷ், திரு. வி. தினேஷ், திரு.ஜி.எஸ். ஸ்ரீது ஆகிய 4 காவலர்கள் 5 தங்கம் மற்றும் 7 வெள்ளி, என 12 பதக்கங்களை வென்றுள்ளனர்.
தமிழ்நாடு காவல் துறை தடகள அணியைச் சேர்ந்த காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன், காவல் ஆய்வாளர்கள் இராஜேஸ்வரி, திரு. எஸ். சரவணப் பிரபு, திரு. கே. கலைச்செல்வன், திரு. ஆர். சாம் சுந்தர், திரு. என். விமல் குமார், காவல் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் திரு.வி. கிருஷ்ணமூர்த்தி, திரு. கே. பாலு, தலைமை காவலர்கள் திரு. பி. சந்துரு, திரு. எஸ். சுரேஷ் குமார், திரு. சி. யுவராஜ்,திரு. டி. தேவராஜன், மகளிர் தலைமை காவலர்கள் எம். லீலாஸ்ரீ, ஆர். பிரமிளா, டி. தமிழரசி ஆகிய 15 பேர் பல்வேறு போட்டிகளில் பொதுப்பிரிவில் பங்கேற்று, 15 தங்கம், 11 வெள்ளி மற்றும் 15 வெண்கலம், என மொத்தம் 41 பதக்கங்களை வென்றுள்ளனர்.
அரசின் அனுமதி பெற்று, தங்கள் சொந்த செலவில் போட்டிகளில் பங்கேற்றுள்ளனர் என குறிப்பிடத்தக்கது. பதக்கங்கள் வென்ற தமிழ்நாடு காவல்துறை வீரர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த நிகழ்வின்போது, காவல்துறை தலைமை இயக்குநர் திரு. சங்கர் ஜிவால், இ.கா.ப., காவல் துறை கூடுதல் இயக்குநர் (ஆயுதப்படை) திரு.எச்.எம். ஜெயராம், இ.கா.ப., ஆகியோர் உடனிருந்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது மொபைல் நிருபர்
அ.சுனில் குமார்