பெரம்பலூர் : பெரம்பலூர் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.A.சரவணசுந்தர் இ.கா.ப அவர்கள் (16.12.2022), -ம் தேதி பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் காவல்துறையினரின் வருடாந்திர ஆய்வினை மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறையினரின் மரியாதை அணி வகுப்பை ஏற்றுக்கொண்ட காவல்துறை துணைத் தலைவர் அவர்கள் ஆயுதப்படை காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட உபகரணங்களை ஆய்வு செய்தும் காவல்துறையினர் பயன்படுத்தி வரும் வாகனங்களை தனிக்கை செய்தும் காவல் நிலையங்களில் செயல்பட்டு வரும் ரோந்து இரு சக்கர வாகனங்களை ஆய்வு செய்தார்.
பின்னர் காவலர்களின் குறைகள் குறித்து கேட்டறிந்தும் பெரம்பலூர் மாவட்டத்தில் நடைப்பெற்ற பல்வேறு நிகழ்வுகளில் சிறப்பாக செயல்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் உள்பட 8 நபர்களின் பணியினை பாராட்டி பாராட்டு சான்றிதழ் வழங்கினார். இந்த ஆய்வின் போது பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச..மணி, அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கா.பெரோஸ் கான் அப்துல்லா , கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.பாண்டியன் (CWC), மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு.வெங்கடேசுவரன், மாவட்ட ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திரு.அசோகன் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டார்கள்.