மதுரை : மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கண்டிய தேவன் பட்டி கிராமத்தில் , மதுரை பாளை மாநிலம் சமூகப் பணி குழு சார்பில் , மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
இதில், கிராமத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் ,பெண்கள் , முதியோர்கள் உள்ளிட்டோர்களுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் ,பெண்கள் பாதுகாப்பு மற்றும் போக்சோ சட்டம் , பெண்கள் வன் கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்டவற்றை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அவர்களுக்கு சட்டத்தில் உள்ள உரிமைகள் குறித்து, திருமங்கலம் முன்னாள் அரசு வழக்கறிஞர் சம்பத் அவர்களால் விளக்க உரை அளிக்கப்பட்டது.
மதுரையிலிருந்து நமது நிருபர்