மதுரை : மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் சந்தைமேடு பகுதியில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசைக் கண்டித்து, பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு, நகர் தலைவர் கார்த்திக், கிழக்கு மாவட்ட செயலாளர் சித்ரா தேவி ஆகியோர் தலைமை தாங்கினர். கிளைத்தலைவர்கள் கெங்கைவாசன், சுரேஷ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மண்டல் தலைவர் சுபாஷ் சந்திரபோஸ் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். நிர்வாகிகள் இருளப்பன், ஶ்ரீமுருகன், காளிதாசன், கருப்பசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதேபோன்று, பாலமேட்டில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக.அரசைக் கண்டித்து சங்கர்கணேஷ் தலமையில் பஸ் நிலையம் அருகில் நடைபெற்றது மாவட்டத் துணைத் தலைவர் சோணை முத்து, மாவட்டச்செயலாளர் மாணிக்கம், மகளிர் அணி மாவட்ட பொது செயலாளர் முனீஸ்வரி சந்தானம், ராஜேஷ்/முனீஷ்வரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி