ஈரோடு: ஈரோடு மாவட்டம்,அந்தியூர் அடுத்த போக்குவரத்து பணிமனை அருகே கரட்டுப்பாளையத்தை சேர்ந்த தேவராஜ்(52).இவர் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக அந்தியூர் தனிப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து போலீசார் தேவராஜ் வீட்டில் சோதனை நடத்தினர்.அப்போது 20 கர்நாடக மது பாக்கெட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து போலீசார் வழக்குப் பதிந்து, தேவராஜை கைது செய்து மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
N.செந்தில்குமார்
ஈரோடு மாவட்ட பொது செயலாளர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா