கோவை: கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில் போதைப்பொருட்களை ஒழிக்கும்
நடவடிக்கையாக DAD-Drive Against Drugs என்ற பேரில் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் நடத்திய அதிரடி சோதனையில்
அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த சூலூர் காவல் நிலைய பகுதியைச் சேர்ந்த K.சுந்தர் 30,P. மலைச்சாமி 36. ஆகிய இருவரையும் கைது செய்து.
அவர்களிடம் இருந்து சுமார் 5 கிலோகிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம்-1* ஆகியவற்றை பறிமுதல் செய்தும். மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
இக்குற்றத்தை புரிவோருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ரூபாய் 2 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படலாம்.
இது போன்ற சட்ட விரோத செயலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.
இதுபோன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் பற்றி தகவல் தெரிவிக்க கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 9498181212 மற்றும் வாட்ஸ்அப் எண் 7708100100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்